Categories
உலக செய்திகள்

7.54 கோடி நிதியுதவி…. உறுதியளித்த சீன அமைச்சர்…. தகவல் வெளியிட்ட பிரபல நாடு….!!

ஆப்கானிஸ்தானுக்கு 7.5 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அமைத்துள்ள தலீபான் அரசின் துணை பிரதமர்களில் ஒருவராக முல்லா அப்துல்கானி பரதர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று துணை பிரதமர் முல்லா அப்துல்கானி சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யீயை நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் ஆப்கான் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆப்கான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறியதாவது, “ஆப்கான் நாட்டை மறுகட்டமைப்பு செய்ய உதவி செய்யப்படும் என்று இருதரப்பு சந்திப்பில் சீனா உறுதி அளித்தது. மேலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (7.54 கோடி) மதிப்பில் மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவி செய்வதாக சீனா கூறியது” என்றும் தகவல் வெளியிட்டார்.

Categories

Tech |