அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு கொள்கை அரசாணையின்படி அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் 5% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், துணை தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் நீலர்வேணி மற்றும் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து மாற்று திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.