குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் சீதாராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் தொடர்ந்து அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட வந்துள்ளார். இதேபோன்று கோட்டாரகுறிச்சி பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பவர் அடிதடி, கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்கள் 2 பேரையும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.