பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பாக இருக்கும் ஐஎஸ்ஐ-யின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜூம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதிபர் இம்ரான்கான் அனுமதி வழங்கியிருக்கிறார்.
பாகிஸ்தான் அதிபர் இவ்வாறு அனுமதி அளித்ததன் மூலம் மூன்று வாரங்களாக நீடித்து வந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. ராணுவம், ஐஎஸ்ஐ தலைவராக இருந்த ஃபயஸ் அகமதிற்கு பதில் நதீம் அன்ஜூம்-ஐ கடந்த 6ஆம் தேதி அன்று நியமனம் செய்தது. எனினும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்துடன் ராணுவம் ஆலோசித்து முடிவெடுக்கவில்லை என்று நதீம் நியமிக்கப்பட்ட அறிக்கையை பிரதமர் அலுவலகம் நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், ராணுவ தலைமை தளபதியான கமர் ஜாவேத் பாஜ்வா மற்றும் அதிபர் இம்ரான் கான் இருவரும் நேற்று சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஐஎஸ்ஐ தலைவராக நதீம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த மாதம் 20ஆம் தேதி அன்று அவர் பொறுப்பேற்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.