Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவின் பயணத்தை வரவேற்கிறேன்…. அவசியமானது தான்…. சீமான் அதிரடி பேச்சு…!!!

பயணத்தை வரவேற்கிறேன் அது அவசியமான ஒன்றுதான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சசிகலா தென்மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டதையடுத்து நேற்று தன்னுடைய இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியோடு நேற்று தஞ்சாவூர் சென்ற சசிகலா தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்தார். சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மருதுபாண்டியர் நினைவு நாளை முன்னிட்டு போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மலர்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், சசிகலா வருவது அதிமுக கட்சி தொண்டர்களின் விருப்பமாக இருக்கலாம். அவர் பயணம் செய்வதை நான் வரவேற்கிறேன். இது அவசியமான ஒன்றுதான் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |