சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை கோடாரியால் கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார்..
கடலூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார் மற்றும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சத்யா என்ற பெண் புகார் அளித்துள்ளார்.
தனது கணவன் மணிமாறன் மற்றும் தன் குழந்தைகளுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். பெற்ற மகன் மற்றும் மருமகள் மீது கோடாரி மற்றும் உருட்டுக்கட்டையால் கொலைவெறி தாக்குதல் சம்பவம் குறிஞ்சிப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.