விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கணாகிணறு பகுதியில் பாண்டியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதற்கிடையே பாண்டியராஜுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பாண்டியராஜை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாண்டியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.