இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள இடைச்சியூரணி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் இருசக்கர வாகனத்தில் கமுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ரவி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ரவி பலத்தகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் ரவியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.