அறநிலையத்துறை கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி அதனை தங்க கட்டிகளாக மாற்றி வைப்பு நிதி மூலம் வருவாய் பெறுவதற்கு தமிழக அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தமிழகம் முழுவதிலும் இந்து முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு மாவட்ட பொது செயலாளர் முருகன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், கார்த்திக் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். இதேபோல் ஆண்டிபட்டியில் இந்து முன்னணியினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. எம் செல்வம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தமிழக அரசை கண்டித்தும், புதிய திட்டத்தை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பி உள்ளனர்.