Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனத்துறையினர் சார்பில்… குப்பைகளை அகற்றும் பணி… மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு…!!

வனத்துறையினர் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவ மாணவிகள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்ட புறவழிச்சாலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாலிதீன் பைகள், மட்காத குப்பைகள் குவிந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் வனத்துறையின் சார்பில் அப்பகுதியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்த தூய்மை பணிகள் கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் தொடங்கி புறவழிச்சாலையில் உள்ள வனத்துறை நாற்றுப்பண்ணை வரை நடைபெற்றுள்ளது.

மேலும் முகாமில் வனத்துறையினர் தேசிய மாணவர்படை, தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதனை உதவி வனப்பாதுகாவலர் மணிகண்டபிரபு தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து தேனி வனச்சரகர் சாந்தகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் என பலரும் பங்கேற்றுள்ளனர். இதனைதொடர்ந்து நாற்று பண்ணையின் செயல்பாடுகள் குறித்தும் வனத்துறையினரின் பணிகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |