தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்து உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து இந்த விதிமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 13ஆம் தேதி அன்று வேலை நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.