மருதுபாண்டியர் நினைவு நாளை முன்னிட்டு போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மலர்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், இந்து சமயம் என்பது நாங்கள் விரும்பி ஏற்றதல்ல; அது எங்கள் மேல் திணிக்கப்பட்டது. மற்ற மாநிலத்தில் உள்ளவர்களை தமிழகம் ஏற்க முடியுமா? தமிழன் எப்போது தன்னை இந்தியன் என்று கருதினானோ அன்று செத்தது பண்பாடு. என்னை பாஜகவின் பி டீம் என்று கூறுகிறீர்கள். என் கட்சியில் உள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவ பிள்ளைகளிடத்தில் விவாதம் செய்து நிரூபித்தால் நான் விட்டுவிட்டு செல்கிறேன்.
கிறிஸ்துவ, இஸ்லாமிய மக்களுக்கு திமுக செய்த நன்மைகளை ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம். பாஜக 4 இடத்தில் வந்து விட்டது நான் ஒரு இடத்தில் கூட வரவில்லை. நான் இந்து இல்லை. என் மார்க்கம் சைவம். நான் வேல் எடுக்கும்போது வெட்கப்பட்டார்கள். பாஜக எடுக்கும்போது பாராட்டுகிறார்கள் என்று பேசியுள்ளார்.