Categories
தேசிய செய்திகள்

ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ…தேசபக்தியை வெளிப்படுத்துங்கள்- பிரதமர் மோடி..!!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 : 30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே விதமான தீர்ப்பை அளித்தது..

அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் எனவும், அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்களது  உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image result for Ayodhya Judgment

இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது. நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை அயோத்தி தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். ராம பக்தியோ அல்லது  ரஹீம் பக்தியோ தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டிய நேரமிது என்று தெரிவித்தார்.

Image result for Be it Ram Bhakti or Rahim Bhakti, it is imperative that we strengthen the spirit of Rashtra Bhakti.

மேலும் பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை நீதி மன்றங்கள் இணக்கமாக முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு கண்ணோட்டத்திற்கும் மாறுபட்ட பார்வைகளை வெளிப்படுத்த போதுமான நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு நீதித்துறை செயல்முறைகளில் மக்கள் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |