Categories
சென்னை மாநில செய்திகள்

15 டன் வாழைத்தார்கள் அழிப்பு…. கோயம்பேட்டில் பரபரப்பு…. வியாபரிகளுக்கு கடும் எச்சரிக்கை……!!!!

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல் மற்றும் ரசாயனத்தில் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தன. இதையடுத்து இன்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய இந்த சோதனையில் கார்பைடு கல் மற்றும் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் வாழைத்தார்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றை பறிமுதல் செய்த குழுவினர் அங்காடிக்கு பின்புறம் உள்ள இடத்திற்கு எடுத்துச் சென்று அளித்தனர். வேறு பழங்கள் இவ்வாறு பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இந்த பழங்களை சாப்பிடும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பழங்களை விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |