Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்யப்பட்ட உடல்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை மர்ம நபர்கள் தோண்டி தலையை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் பாரதிதாசன் நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மாதம்மாளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அளிக்கபட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் மாதம்மாள் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகாமையில் மர்ம நபர்கள் மது அருந்திக்கொண்டு இருக்கின்றனர். அப்போது புதைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பெண்ணின் உடலை தோண்டி தலையை வெட்டி எடுத்து சென்று விட்டதாக தகவல் பரவி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மது அருந்தியவர்கள் யார், எதற்காக இப்படி செய்தார்கள் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |