அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இன்று காலை ஓமலூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், ஆட்சி பொறுப்பேற்று 150 நாட்கள் ஆகிய நிலையில் நீட் தேர்வு ரத்து என்று கூறியது என்ன ஆனது? குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உதவித் தொகை, எரிவாயு உருளை மானியம், கல்விக்கடன், சுய உதவிக்குழு கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை உயர்த்தி தருவது போன்ற திட்டங்கள் என்ன ஆனது?
அ.தி.மு.க., ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது தி.மு.க., ஆட்சியில் கட்ட பஞ்சாயத்து, ரவுடிசம், அராஜகம் அதிகரித்து விட்டது. தற்போது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்களிடம் அ.தி.மு.க., செய்த சாதனைகளை எடுத்து கூற வேண்டும். தற்போது உள்ள விஞ்ஞான கால கட்டத்திற்கு ஏற்ப அரசியல் யுக்திகளை பயன்படுத்த வேண்டும். திறமையானவர்கள் விசுவாசமானவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.