நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வலிமை படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது நடிகர் அஜித் பைக்கில் பயணம் மேற்கொண்டு வருகிறார். வட இந்தியாவில் பயணத்தை தொடங்கிய அஜித் வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. உயரமான மலையின் முகட்டில் நின்று அஜித் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.