நடிகர் எஸ்.ஜே.சூர்யா நாடி நரம்பு எல்லாம் போய்விட்டன என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் சில ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடேயே, சிம்புவுடன் இவர் நடித்த ”மாநாடு” திரைப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியாக உள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில்,” 8 நாள்செய்ய வேண்டிய மாநாடு டப்பிங் வேலையை 5 நாளில் முடித்தேன். என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போய்விட்டன. குறைந்தது 10 நாள் ஓய்வு கொடுங்கள் என்று கெஞ்சினேன்”. என பதிவிட்டுள்ளார்.