சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகாமையில் சாராயம் விற்பனை செய்த நபரை பிடித்த காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திலிருக்கும் குப்பத்தில் வசிக்கும் பிரசாந்த் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக பிரசாந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.