Categories
உலக செய்திகள்

இவ்வளவு மதிப்பா….? முகலாயர் கால கண்ணாடிகள்…. லண்டனில் ஏலம்….!!

முகலாயர் கால கண்ணாடிகள் லண்டனில் பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

லண்டனில் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபியின் மூலம் இரண்டு ஜோடி முகலாயர் கால கண்ணாடிகள் ஏலம் விடப்பட்டன. இது இந்திய ரூபாயில் சுமார் 27 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு கண்களில் ஒன்று கேட் ஆப் பாரடைஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள பிரேம்கள் வைரத்தாலும் லென்ஸ்கள் மரகதத்தாலும் ஆனவை. மேலும் மற்றொரு கண்ணாடி ஹலோ ஆப் லைட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் இருக்கும் பிரேம்கள் மற்றும் லென்சுகள் இரண்டுமே வைரத்தால் ஆனவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த லென்ஸ்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இதனை தொடர்ந்து கண்ணாடியில் உள்ள பிரேம்கள் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. குறிப்பாக  17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளவரசருக்காக இதனை உருவாக்கியுள்ளனர். அதிலும் கண்ணாடியில் இருந்த மரகதம் கொலம்பியாவில் இருந்து போர்ச்சுக்கீசிய வணிக கப்பல்கள் மூலமாக வரவழைக்கப்பட்டவை. மேலும் அதில் உள்ள வைரங்கள் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |