சுடு கஞ்சி கொட்டி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டூர் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், யோகஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ராஜகுமாரி இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்து தற்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அதன்பின் ராஜகுமாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் யோகஸ்ரீ அவரது பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் அருகாமையில் விளையாடிக்கொண்டிருந்த யோகஸ்ரீ சாதம் வடித்து விட்டு வைத்திருந்த சுடு கஞ்சி இருந்த பாத்திரத்தை பிடித்து இழுத்ததால் எதிர்பாராவிதமாக அவர் மீது கொட்டியதால் வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார்.
அப்போது இவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று யோகஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்களால் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி யோகஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.