Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதை கைவிட வேண்டும்…. கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி சார்பாக கோவில் நகைகளை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவரான நாகராஜ் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், பா.ஜ.க தலைவர் நவீன் மற்றும் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இதில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிடுமாறு வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து சுந்தர விநாயகர் கோவில் அருகாமையிலும் இந்து முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கியுள்ளார். பின்னர் பாலகிருஷ்ணன் மற்றும் திலிப் குமார் முன்னிலை வகித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி கோட்ட அமைப்பாளரான டி.வி. ராஜேஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியுள்ளார்.

Categories

Tech |