Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி மட்டும் பேசாதீங்க…! அமைச்சர்களுக்கு வாய் பூட்டு…. ஸ்டாலின் செம உத்தரவு …!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வார்த்தைகளை  கூட கடுமையாக பேசக் கூடாது என்று அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஒருவர் மீது ஒருவர் கை வைப்பது அன்பால் கூட வைக்கலாம். அல்லது ஒருவரால் சரியாக அவர் நிலை தடுமாறி நின்ற போது கை கொடுத்து அந்த தடுமாற்றத்தை கூட தடுக்க முற்படலாம். எங்களைப் பொறுத்த அளவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தல், வார்த்தைகளை  கூட கடுமையாக பேசக் கூடாது என்றுதான் வலியுறுத்துகிறார், அதோடு மட்டுமல்லாமல் துறை சார்ந்த ஆய்விற்கு செல்கின்றபோது துறை சார்ந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என்று அறிவுறுத்துகின்றார்.

இருந்தாலும் நண்பர்கள் பத்திரிகையாளர்கள் ஆயிற்றே இதுபோன்று கேட்கின்ற போது… ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் வேண்டும். நான் வெறும் தொகுதி அரசியல் மட்டும் செய்வதில்லை. இப்பொழுது உட்கார்ந்து கொண்டு இருக்கின்ற தொகுதி ஆயிரம் விளக்கு, இது ஒன்றும் துறைமுகம் அல்ல.

தமிழ்நாடு முழுவதும் இதுவரையில் 140க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வந்திருக்கிறோம். கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரையில் இருக்கின்ற பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வருவாய் மாவட்டங்களில் 26 மாவட்டங்களுக்கு ஆய்வினை மேற்கொண்டு இருக்கின்றோம்.

அதெல்லாம் துறைமுகம் தொகுதியில் தான் வருகின்றதா ?  ஆகவே இன்னார், இனியவர் என்பதல்ல. இது ஒரு துறை, ஆகவே அனைத்து தொகுதிகளையும் ஒன்றாக பாவித்து அனைத்து தொகுதிகளிலும் இருக்கின்ற இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இருக்கின்ற குறைகளை நிறைவு செய்கின்ற பணியை நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என அவர் கூறினார்.

Categories

Tech |