Categories
அரசியல் மாநில செய்திகள்

இல்லை இல்லை…. நான் முழுசா பார்த்தேன்… வீர வசனம் பேசும் அண்ணாமலை …!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீர வசனம் பேசிக்கொண்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உங்களுக்கு ஏதாவது சப்ஜெக்ட் வேணும். கை வைப்போம் என்று அவர் சொன்னார் என்று நீங்கள் தான் கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என பத்திரிக்கையாளரிடம் கூறிய அமைச்சர், இல்லை இல்லை நான் முழுவதுமாக பார்த்தேன். நீங்கள் அவர்கிட்ட போய் என்ன கேட்டீர்கள் என்றால்…

இந்து சமய அறநிலையத்துறை கை வைப்போம் என்று சொல்லி இருக்கிறார், பதில் என்ன என்று கேட்டீர்கள். நான் தெளிவாக அன்றைக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னேன் என்றால்…. பாஜக சார்பில் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் பதில் சொல்வதே இல்லையே…. ஏன் என்று நீங்கள் கேட்டீர்கள் ?

நான் அதற்கு தெளிவான பதிலைச் சொன்னேன். இந்து சமய அறநிலைத்துறை மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் எடுத்துக் கூறினால் அதற்கு தகுந்த பதில் தருவோம் என்று தான் கூறினேன்.

நீங்களாகவே ஒரு கற்பனையை உருவாக்கிக்கொண்டு கை வைப்பேன் என்று அமைச்சர் சொல்லுகிறாரே நீங்கள் அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்று அவரை கேட்டீர்கள், உடனே அவர் வீரவசனம் பேசி இருக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |