டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா வெற்றி பெற்றது.
7-வது டி20 உலகக் கோப்பை போட்டியின் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து-நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 44 ரன்கள் குவித்தார் . இதன்பிறகு 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி விளையாடியது .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிரேக் வில்லியம்ஸ் 23 ரன்னும், மைக்கேல் வேன் 18 ரன்கள் எடுத்தனர். இதன்பிறகு களமிறங்கிய ஷேன் கிரீன் (9), கேப்டன் எராஸ்மஸ் (4) என விரைவில் ஆட்டமிழந்தனர்.
அப்போது அணியின் ஸ்கோர் 102 ஆக இருக்கும்போது டேவிட் வீஸ் 16 ரன்னில் வெளியேறினார் . ஒருபுறம் விக்கெட்டுகள் இழக்க மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஸ்மித் ரன்களை குவித்தார். இறுதியில் கடைசி ஓவரில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் அவர் முதல் பந்தில் சிக்சர் அடித்தார். இறுதிவரை ஸ்மித் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்து நமீபியா அணி வெற்றி பெற்றது இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி நமீபியா அபார வெற்றி பெற்றது.