Categories
மாநில செய்திகள்

வாத்தி ரெய்டு…! ஸ்கூலுக்கு முதல்வர் திடீர் விசிட்…. ஆடிப்போன ஆசிரியர்கள்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மு க ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக செல்லும்போது வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார் .இந்த ஆய்வில் முதலமைச்சரிடம் பள்ளியின் தலைமையாசிரியர் பேசினார். அப்போது இப்பள்ளியில் மொத்தம் 488 மாணவர்கள் படித்து வருவதாகவும் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் வகுப்பறைக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் நேரடியாக உரையாடினார். மேலும் மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்துவதோடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பள்ளியின் வகுப்பறைகளின் தரம், ஆய்வகம், உணவு தயாரிக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது முதல்வருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |