சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று நடைபெற்ற மருதுபாண்டிய சகோதரர்கள் குருபூஜை நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வரும் நகர்ப்புற தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். தமிழக அரசு செயல் திட்டங்களில் ஆளுநர் தலையிடுவதற்கு சட்டத்தில் அதிகாரம் உள்ளது.
தமிழக அரசின் செயல் திட்டங்களை கவர்னர் தலையிடக்கூடாது என்று கூறுவதற்கு கே.எஸ் அழகிரி ஒன்றும் அவருக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு பெரியவர் கிடையாது, அதிமுக எங்களுடைய மதிப்பிற்குரிய கட்சி. அந்த கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று பேசியுள்ளார்.