ஆஸ்திரேலிய பொறியியலாளர்கள் உலகிலேயே முதன் முதலாக அனல் ஆற்றலை சேமித்து வைக்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ காஸ்ட்ல் பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர்கள் கிராபைட் மற்றும் அலுமினியத்தை பயன்படுத்தி செங்கல் வடிவிலான பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த செங்கல் வடிவிலான பொருள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் வரும் ஆற்றலை சேமித்து வைக்க பேட்டரிகளை போல பயன்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் எரிபொருளை சேகரித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு தற்போது தொழில்நுட்பங்கள் முக்கியதுவம் ஒன்றாக ஒன்றாக மாற தொடங்கியுள்ளது.