அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,உச்ச நீதிமன்ற தீர்ப்பு யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கப்படாது. நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் அமைதியை உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து தரப்பும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதாக கருதுகிறேன். எந்த ஒரு பிரச்னைக்கும் நீதித்துறை மூலம் ஏற்கத்தக்க வகையில் தீர்வு காண முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.