தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது.
இந்நிலையில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. விண்ணப்ப கட்டணம் பொது ரூ.600, எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.555, எழுத்து தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.