கேரளாவில் கனமழை தொடர்வதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. வழக்கமாக அணையின் நீர்மட்டம் உயரும் போது அணை இடிந்து விழும் அபாயம் இருப்பதாக மக்கள் மத்தியில் பீதியை கிளப்ப சில தகவல்கள் பரவும். ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டியதால் இரண்டாம் கட்ட எச்சரிக்கைவிடப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 140, 141, 142அடியாக உயரும்போது முறையே மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 142 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால் 13 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Categories