சசிகலா விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அக்கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளரும், எம்ஜிஆர்-ன் பேரனுமான ஜூனியர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
சசிகலா விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கருத்து தெரிவிக்கக் கூடாது என்று அக்கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளரும், எம்ஜிஆர்-ன் பேரனுமான ஜூனியர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ராமாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜூனியர் ராமச்சந்திரன், சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் இணைந்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதுவரை கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அதிமுக நிர்வாகிகள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த சூழ்நிலையில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளர், ஓபிஎஸ் ஐயாவும் அனைவரும் இணைந்து இந்த கட்சியை இப்போது நன்றாக வழி நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த இருவரையும் தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து தான் முடிவு செய்தனர். அவர்கள் கழகத்தில் என்ன முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். எனவே 2 பேரும் கழகத்தில் உள்ள அனைவருடனும் சேர்ந்து தான் ஒரு முடிவு எடுப்பார்கள். அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்கவேண்டும். எனவே தனித்தனியாக நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.