Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசு சார்பில் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விலையில்லா திட்டங்கள் மற்றும் மானிய நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விலையில்லா திட்டங்கள் எதிர்ப்பவர்கள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் போது அமைதியாக உள்ளனர். ஏனென்றால் இந்த சமூகத்தில் அனைவருக்குமான தேவைகள் மாறுபடுகின்றன.

அவற்றை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. போக்குவரத்து நெரிசல் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணத்தை கருத்தில் கொண்டு மகளிருக்கான 50 சதவீத மானிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக அரசுப் பேருந்துகளில் அவர்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும்.

அதற்கான தரவுகளை சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் ஆதாரில் கைரேகை உட்பட பல்வேறு போலியான ஆவணங்கள் உள்ளன. இதனால் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக செல்வதை உறுதி செய்வதில் சிரமமாக உள்ளது. தகவல் மேம்பாடு தான் நலத்திட்டங்களை முழுமைப்படுத்தும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |