Categories
தேசிய செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிவாயுக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. அதனைப் போலவே சமையல் எரிவாயுவின் விலையும் 900 ரூபாய் கடந்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரேஷன் கடைகள் மூலம் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்சு பாண்டே தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேருவதற்கு, விருப்பமும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அதற்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நிதி சேவைகள் துறையின் பிரதிநிதி,ரேஷன் கடைகள் மூலமாக நிதி சேவைகளை வழங்கும் திட்டத்தை பாராட்டிய பிறகு ரேஷன் கடை டீலர்களுக்கு முத்ரா கடன் களின் மூலதன பெருக்கத்தை நீடிப்பதாகவும் அதற்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |