புயல் கடுமையாக வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடுமையான புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மரங்கள் வேரோடு காற்றில் சாய்ந்துள்ளன. அதிலும் புயல் பாதிப்பின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் சுமார் 4,66,000 வீடுகளில் மின்சாரம் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
அங்கு புயல் காரணமாக கடினமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரும்படி அமெரிக்கா தேசிய வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.