Categories
தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பு: சகோதர , சகோதரி கருத்து…..!!

அயோத்தி தீர்ப்பு குறித்து, ராகுல் காந்தியும் ,பிரியங்கா காந்தியும் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for ayodhya

இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “அயோத்தி விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் சிறப்பு செய்ய முடியும். ஒருவருக்கொருவர் சகோதரத்துவம், அன்பை பரிமாறிக்கொள்ளும் நேரம் இது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக கடைப்பிடித்துவரும் ஒற்றுமையை இந்த சூழ்நிலையிலும் கடைப்பிடிக்க வேண்டும். சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |