Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் வழக்கில்…. கைதாகி சிறையில் உள்ள ஆர்யன் கானுடன் செல்பி எடுத்தவர் கைது…!!!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்  கானுடன் செல்பி எடுத்தவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஷாருக்கான் மகன் உட்பட 8 பேரை கைது செய்தனர். தற்போது ஆர்யன் கான் உட்பட சிலர் மும்பையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இவர் ஜாமின் கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் ஆர்யன் கானை  விடுவிப்பதற்கு ஷாரூக் கான்  இடம் தொடர்ந்து கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுடன் செல்பி எடுத்துக் கொண்ட கிரண் கோசவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சியாக இருந்த கோசவியை புனே போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |