தல அஜித் பைக் ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாகவே உலக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான்.
சமீபத்தில், இவர் வாகா எல்லையில் நம்முடைய இந்தியக் கொடியை ஏந்தி பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இவர் உயரமான பாறையின் விளிம்பில் நின்றபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில், தற்போது இவர் கரடுமுரடான பகுதியில் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சுப்பராஜ் வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#AjithKumar offroading! pic.twitter.com/Aiq20mHZ4v
— Suprej Venkat (@suprej) October 27, 2021