மதிமுகவில் குழப்பத்தை உண்டாக்க இடம் கொடுக்கவே மாட்டோம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த வைகோ மகனிடம், இப்போது புது பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது கட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது உங்களுடைய பொறுப்புகள் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்குறீர்கள் என கேட்டதற்கு, இடைமறித்த வைகோ, நீங்கள் ஒரு விஷ தன்மை வாய்ந்த நோக்கத்தோடு கேள்விகள் கேட்குறீர்கள்,
இவ்வளவு பேர் இருக்கின்ற இடத்தில் நீங்கள் கேட்பது எதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாமா ? இந்த பதிலில்… அப்படி என்கின்ற நோக்கத்தோடு கேட்குறீங்க. அதற்கு இடம் கொடுக்கமாட்டாது, மறுமலர்ச்சி திமுக ஒட்டுமொத்த ஒரே கருத்தில் இருக்கிறது. யாரும் ஒரு நபர் இரண்டு நபர் போனதினால் இந்தக் கட்சி இல்லை. அதை தாண்டிய இடத்தில் இந்த கட்சி இருக்கிறது.
நீங்கள் கேட்ட கேள்விக்கு அதனுடைய தலைமை கழக செயலாளர் என்ன பணி என்பதை நான் நாளைக்கு அலுவலகத்தில் செல்ல போகிறேன். கட்சியினுடைய மூத்த நிர்வாகிகளிடம் பேசி தெரிவித்துகொள்கிறேன் என வைகோ மகன் பேசிக்கொண்டு இருக்கும் போது இடைமறித்த வைக்கோ, கட்சி தலைமை கழக செயலாளருக்கு என்ன பணி என்பதை கட்சி வகுத்து கொடுக்கும் என தெரிவித்தார்.