சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் வருகிற 3-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ் பெற்ற திருக்கோவில்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு ஐப்பசி மாதம் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா குறைந்து வந்தால் இந்த கோயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையின்போது கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் ஐப்பசி மாத பூஜையில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்தவர்கள் வரும் 3ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதற்காக முன்பதிவு செய்த 2 தடுப்பூசி அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றுடன் பக்தர்கள் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.