Categories
மாநில செய்திகள்

கோவில் நகைகளை உருக்க தடை…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அறங்காவலர் நியமனத்துக்கு பிறகு கோவில் நகைகள் உருக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஹைகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது.அறங்காவலர் களை நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருகுவது குறித்து எந்த முடிவும் உருக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நகைகளை உருக்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இண்டிகேட் கலெக்டிவ் அறக்கட்டளை தொடர்ந்த இந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் அறங்காவலர் களை நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருகுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |