டி20 உலகக் கோப்பை போட்டியில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன .இதில் நேற்றைய ஆட்டத்தில் நமீபியா – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதில்முதல் ஓவரை நமீபியா அணியில் ரூபன் ட்ரெம்பல்மேன் பந்து வீசினார் .அப்போது ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிரடி வீரர் முன்சேவை கிளீன் போல்டாக்கி ஆட்டமிழக்கச் செய்தார்.
https://twitter.com/rishobpuant/status/1453364037211754509
இதன்பிறகு 3-வது பந்தில் மெக்லாயிடு மற்றும் 4வது பந்தில் ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் பெர்ரிங்க்டன் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஒரே ஓவரிலேயே முதல் 3 வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றிய ரூபன் ட்ரெம்பல்மேன் வரலாற்று சாதனை படைத்துள்ளார் .மேலும் இப்போட்டியில் அவர் 4 ஓவர் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .இதன்மூலம் டி20 உலக கோப்பை தொடரில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட் கைப்பற்றி அதுவும் 3 வீரர்களையும் டக் அவுட் செய்த பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.