Categories
உலக செய்திகள்

இந்திய இளைஞர்கள் வேணும்…! உடனே இறக்குமதி செய்யுங்க…. ரஷ்யாவில் எழுந்த கோரிக்கை ..!!

இந்திய இளைஞர்கள் ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு பிரபல பெண்ணிய எழுத்தாளர் ஒருவர் ரஷ்ய அரசை வலியுறுத்தியுள்ளார். எதற்கு தெரியுமா ?இந்த தொகுப்பை பாருங்கள்

ரஷ்யா ஒரு குளிர் நாடு. அங்கு மது அருந்துவது மிகச் சாதாரணம். அதன்படி மூன்றில் ஒருவர் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதுவும் மொடாகுடி தான். அப்படி குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்திலும் சிக்குகிறார்கள். அதில் பலர் இறந்தும் போய் விடுகிறார்கள்.இதனால் பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் தான் ரஷ்ய எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான மரியா ஆர்பட்டாவோ என்கிற பெண் அந்நாட்டின் நோவோஸ்டோ என்ற நாளிதழில் ஒரு கட்டுரை எழுதுகிறார்.

அந்த கட்டுரைகள் நம் நாட்டு ஆண்கள் அதிக அளவில் மது அருந்தி மிக இளம் வயதிலேயே உயிரை விட்டுவிடுகிறார்கள். அதனால் இங்கு ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். நம் நாட்டு ஆண்களுக்கு பொறுப்பு என்பதே இல்லை. தங்கள் குடும்பங்களைப் பற்றிய அக்கறை இல்லாமல் உயிரை விடுகிறார்கள். இதனால் வரும் காலங்களில் ரஷ்ய மக்கள் தொகை அதலபாதாளத்துக்கு போய்விடும். எனவே தகுதியான இந்திய இளைஞர்களை ரஷ்யாவுக்கு வரவழையுங்கள். ஏனென்றால், அவர்கள் குடும்பத்தை அக்கறையோடு பார்த்துக்கொள்வார்கள். தகுதியான சிறந்த குடும்ப தலைவர்களாகவும் அவர்களால் இருக்க முடியும் இப்படி கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஆர்பட்டாவோ கட்டுரையில் இன்னொன்றையும் குறிப்பிட்டுள்ளார். இந்திய இளைஞர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துவரபடாவிட்டால் ரஷ்யா 2 பெரிய ஆபத்துகளை எதிர் நோக்கியிருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார். அவர் முதலில் மக்கள் தொகை தட்டுப்பாடு இதற்காக இந்தியா ரஷ்யாவுக்கு உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது ஏராளமான ரஷ்ய ஆண்களின் மரணமும், சீன குழந்தைகளின் பிறப்பையும், அவர் அச்சமூட்டும் அம்சமாக பார்க்கிறார். அடுத்த ஆபத்தாக அவர் குறிப்பிடுவது ரஷ்யாவில் சீனர்களின் ஆதிக்கம் குறித்து, தற்போது ஏராளமான சீன இளைஞர்கள் ரஷ்ய பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இது தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டுக்குள் சீனா ரஷ்யாவின் 2 -வது ஆட்சி மொழி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார் மரியா ஆர்பட்டாவோ. இந்த பிரச்சனைக்கு இந்தியர்களை ஏன் தேர்வு செய்தார் என்பதற்கும் அவர் விளக்கம் கொடுக்கிறார்.

இந்தியாவும், ரஷ்யாவும் இந்தோ ஐரோப்பிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்கிறார். அதோடு இந்தியாவின் சமஸ்கிருத மொழிக்கும், ரஷ்ய மொழிக்கும் உள்ள சொல் அகராதியில் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இன்னொரு தகுதியாக அவர் குறிப்பிடுவது என்னவென்றால், இந்திய இளைஞர்கள் மதிப்புமிக்க பொறுப்புள்ள குடும்பத் தலைவர்களாக இருப்பார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் அதிக குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பதை விரும்புவார்கள் என்றும் குறிப்பிடுகிறார் ஆர்பட்டாவோ.

ரஷ்யாவில் அதிகரித்துவரும் ஆண் இறப்பு விதத்தால் மக்கள் தொகை குறைந்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இந்திய இளைஞர்களை ரஷ்ய பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி மரியா ஆர்பட்டாவோ எழுதிய த டேஸ்ட் ஆஃப் இந்தியா என்கின்ற புத்தகம்தான் அந்நாட்டின் சமீபத்திய அதிக விற்பனையான புத்தகமாம். நம்மைப் பற்றி அக்குவேறு ஆணிவேராக தெரிந்து வைத்திருக்கிறார். சரி இந்தியாவில் பற்றி அவர் எப்படி இவ்வளவு நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் தெரியுமா? அவர் திருமணம் செய்திருப்பது ஒரு இந்திய ஆணை. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆணை.

உண்மையிலேயே அந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவருக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. இங்கு முக்கியமான ஒன்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மரியா ஆர்பட்டாவோ குறிப்பிட்டுள்ளது, தகுதியான இந்திய இளைஞர்களை….. இங்கும் டாஸ்மாக்கே கதி என கிடப்பவர்களும் இருக்கிறார்கள். குடும்பத்தைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். தான்தோன்றித்தனமாக நடந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஆர்பட்டாவோ வரவேற்கவில்லை. உண்மையில் தகுதியுள்ள தகுதியுள்ள இந்திய இளைஞர்களை தான் அவர் வரவேற்கிறார்.

Categories

Tech |