Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த இளம்பெண்… துடிக்கத் துடிக்க கொலை செய்துவிட்டு… வாலிபர் செய்த கொடூர காரியம்…!!!

காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பகுதியை சேர்ந்த உஷா என்பவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உஷா வை கோபாலகிருஷ்ணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். உஷாவிடம் தனது காதலை தெரிவித்தபோது அவர், கோபாலகிருஷ்ணனின் காதலை ஏற்க மறுத்துள்ளார். தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

இருப்பினும் அவர் தொடர்ந்து உஷாவை தொல்லை செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று மல்லசந்திரா கிராமம் அருகே உஷாவை தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உஷா கோபாலகிருஷ்ணனை கடுமையாக எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த கோபாலகிருஷ்ணா உஷாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கெத்துலாபுரா என்ற கிராமத்திற்கு சென்ற கோபாலகிருஷ்ணன் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |