Categories
உலக செய்திகள்

307 புதிய கோடீஸ்வரர்கள்…. ‘நோங்ஃபு ஸ்பிரிங்’ முதலிடம்…. பிரபல நாட்டு செல்வந்தர் பட்டியல்….!!

சீனாவின் கடந்த ஓராண்டில் 307 புதிய கோடீஸ்வர்களை செல்வந்தர்கள் பட்டியலில் இணைத்துள்ளனர். 

சீனாவின் பொருளாதாரம் தொழில்நுட்ப நிறுவனங்களால் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. சீனாவில் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான செல்வந்தர்கள் பட்டியலில் புதிய ஆற்றல் துறை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பங்கு சந்தை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சீனா 560 பில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வத்தை குவித்துள்ளது.

இந்த ஆண்டு செல்வந்தர் பட்டியலில் சீனாவின் ‘நோங்ஃபு ஸ்பிரிங்’ பாட்டில் குடிநீர் விநியோக நிறுவனர் zhong shanshan என்ற தொழிலதிபர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், zhong shanshan-இன் மொத்த சொத்து மதிப்பு சுமார் 67 பில்லியன் டாலர்கள் ஆகும்.

அதோடு, இந்த ஆண்டு 52 புள்ளிகளுடன் டிக்டாக் நிறுவனர் zhang yiming சீனாவின் செல்வந்தர் பட்டியலில் 7 ஆவது இடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலர்கள் ஆகும். மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் புதிய கோடீஸ்வரர்கள் 307 பேர் செல்வந்தர்கள் பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |