Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்க தனிநபர் கடன் 15 லட்சமாக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு கடன் தொகை வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாயும், நகர கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 6 லட்சம் ரூபாயும் கடனாக அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் கோரிக்கைக்கு இணங்க வங்கி ஊழியர்களுக்கு 3 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டது.

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கடன் தொகை 6 இலட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து தனிநபர் கடன் உச்ச வரம்ப 2 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பை 2 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் கடன் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடனை திருப்பி செலுத்தும் தவணை காலம் 120 மாதங்களுக்கு உட்பட்ட இருத்தல் வேண்டும். அதிகபட்ச கடன் அளவு 15 லட்சம் அல்லது உறுப்பினர் பெரும் மொத்த சம்பளத்தில் 25 மடங்கு, இதில் எது குறைவோ அந்த தொகையை கடனாக வழங்கப்பட வேண்டும். வழங்கப்பட வேண்டிய கடன் தொகையில் பத்தில் ஒரு பங்கு தொகையை கடன் பெரும் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |