Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடர் மரணம்…. செவிலியரின் கொடூர செயல்…. நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு….!!

அமெரிக்காவில் 4 இருதய நோயாளிகளை கொலை செய்த செவிலியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘கிறிஸ்துஸ் டிரினிட்டி மதர் பிரான்சிஸ்’ மருத்துவமனையில் கடந்த 2017 மற்றும் 2018 இல் இருதய நோயாளிகள் 4 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தனர். இந்த சம்பவம் அங்குள்ள மருத்துவர்களுக்கு பெரும் குழப்பத்தை  ஏற்படுத்தியது.

அதிலும், இருதய நோயாளிகள் 4 பேரும் உடல்நலம் தேறிய நிலையில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இது அங்குள்ள மருத்துவர்கள் மட்டுமின்றி நோயாளிகளின் குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இருதய நோயாளிகளின் கொலை தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த தொடங்கினர்.

இதனை தொடர்ந்து, மருத்தவமனையில் பணிபுரிந்த வில்லியம் ஜார்ஜ் டேவிஸ் (37) என்ற செவிலியரே மர்ம மரணங்களுக்கு காரணம் என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், வில்லியம் 4 இருதய நோயாளிகளின் இதய நாளங்களிலும் காற்றை நிரப்பி கொன்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. தற்போது, நீதிமன்ற விசாரணையில் வில்லியம் குற்றவாளி என நிரூபணமாகி மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |