மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுமாறு தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளாவில் கனமழை பெய்தது.
இந்த மழையால் கேரளாவில் 10- கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு உதவுமாறு தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களில் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.