Categories
தேசிய செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமர்…. அரசியல் நிபுணர் பரபரப்பு…!!!!

பிரதமர் நரேந்திர மோடியை வேண்டுமானால் மக்கள் நீக்க முடியும். ஆனால் பாஜக இன்னும் பல ஆண்டுகளுக்கு யாராலயும் அசைக்க முடியாது என்று அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். பாஜகவுடன் நாம் இன்னும் பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும். பாஜக வென்றாலும் சரி தோற்றாலும் சரி இந்திய அரசியலின் மையமாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு முதல் 40 ஆண்டுகள் எப்படியோ பாஜகவுக்கும் அப்படிதான். பாஜக எங்கும் சென்று விடாது.

அனைத்திந்திய அளவில் 30 சதவீதம் வாக்குகள் பெற்ற கட்சி அவ்வளவு சுலபத்தில் வந்து விடாது. ஆகவே மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற பொறியில் சிக்கி விடாதீர்கள். மோடியை வேண்டுமானால் மக்கள் நிராகரித்து விடலாம். ஆனால் பாஜக எங்கும் சென்று விடவில்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாஜகவுடன் நாம் போராடித்தான் ஆக வேண்டும். மோடியின் வலிமையை அறிந்து கொள்ளாத வரை, மோடியின் இடத்திற்கு ராகுல் காந்தியால் வர முடியாது. அவரை தோற்கடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |