நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.915.50- க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இன்னும் விலை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சிலிண்டர் விலை மாதம் மாதம் உயர்த்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தச் செய்தியும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.